குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை…!

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி. இந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி  தனது தோழிகளுடன் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது கணேஷ் என்கிற இளைஞர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி இருக்கிறார். உடனே அந்த சிறுமயைதூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த இளைஞர்.

பிறகு மயக்கம் தெளிந்ததும் அந்த சிறுமி அழுதவுடன், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார் அந்த இளைஞர்.  வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு வயிற்று வலி வந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை‌ அவரது பெற்றோரிடம் சொல்ல,  பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு என்ன நடந்தது என்று சிறுமியிடம் டாக்டர்கள்விசாரித்த போது,  அந்த அங்கிள் எனக்கு கூல்ட்ரிங்ஸ் குடிக்க கொடுத்தாங்க. அதை குடிச்சதும் மயங்கி விழுந்துட்டேன்.  அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலன்னு சொல்லி இருக்கிறார்.  அப்புறம் அந்த அங்கிள் என்னை மிரட்டுனாங்கன்னும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதை அடுத்து அந்த சிறுமி சொன்ன வாக்குமூலத்தின் படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி கணேஷை கைது செய்தனர்.

 கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த இந்த வழக்கில் கணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கில் விசாரணை முடிந்து கணேஷ் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து நேற்று கணேஷ்க்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.  

Baskar

Next Post

மாதம் 60 ஜிபி டேட்டா.. BSNL-ன் மலிவான ரிசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்..

Sat Jul 2 , 2022
அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் பயனர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2022 முதல் பயனர்கள் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இந்த இரண்டு திட்டங்களும் ரூ. 250க்கும் குறைவாகவே உள்ளன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் நிறுவனம் ரூ. 228 மற்றும் ரூ. 239 என விலை நிர்ணயக்கப்படுள்ளது. மற்ற நிறுவனங்கள் மாதத்தின் பெயரில் 28 […]

You May Like