fbpx

அடுத்தது மோதிய 7 கார்.. 2 லாரி… ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து… ஒருவர் மரணம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் அந்த லாரி மற்றொரு லாரி மீது மோதியது. அது மற்றொரு லாரி மீது மோதியது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், கார்கள் மற்றும் அரசு பஸ் என அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 7 கார்கள், 3 லாரிகள், ஒரு அரசு பஸ் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் ஒரே காரில் சென்ற கோவையை சேர்ந்த ஆயில் மில் அதிபர் வெங்கடேஷ் (33), அவரது நண்பர் அரவிந்த் (30), ஊழியர்கள் தஞ்சாவூரை சேர்ந்த துரை (24), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா (26) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். மற்றொரு காரில் சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்விழி(65), அவரது மகன் பூபேஷ், டிரைவர் ரவி(55) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மொத்தம் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், டிரைவர் ரவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

English Summary

Next 7 cars collided.. 2 lorries… Horrible accident on Hosur National Highway… One died

Vignesh

Next Post

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... இனி இந்த வேலை செய்ய வேண்டிய கவலை இல்லை...!

Mon Aug 26 , 2024
The government has taken steps to eliminate disruptions to the teaching-learning work while the teachers are doing it.

You May Like