திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், அந்த கட்சியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு பாஜகவின் நடவடிக்கை இருக்கிறது.
மேலும் திமுகவை ,பாஜக தலைமை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே சமயம் அதிமுக இது போன்ற விவகாரங்களில் சற்று தன்மையுடனே நடந்து கொள்கிறது. உண்மையிலேயே தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி அதிமுகவா? அல்லது பாஜகவா? என்ற சந்தேகம் சற்று வலுவாகவே ஏழத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுக பைல்ஸ் முதல் பாகம் என்று திமுகவை பற்றிய பல முக்கிய ஆவணங்களை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அது திமுகவினர் இடையே பல சர்ச்சைகளை உண்டாக்கியது. இந்த நிலையில் தற்போது திமுக பைல்ஸ் 2ம் பாகம் தயாராக இருக்கிறது எனவும், அதில் புதிய அமைச்சர்கள் தொடர்பான விவரங்கள் தான் அதிகம் இருக்கின்றன என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களும், 300க்கும் மேற்பட்ட வினாமிகளின் விவரங்களும் திமுகவின் 2ம் ஃபைல்சில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனை பொதுவெளியில் வெளியிடலாமா? அல்லது ஆளுநரிடம் வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறேன் என்று அண்ணாமலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.