நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அந்த விதத்தில், இன்று, என்எல்சி நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு செய்தி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, என்எல்சி நிறுவனமானது SME Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 92 காலி பணியிடங்கள் இருக்கின்றது என்ற செய்தி கிடைத்துள்ளது. இந்த பணிக்கான இணையதள வசதி அதிகாரப்பூர்வமான இணையதளமான www.nlcindia.in என்ற இணையதளத்தில் 4.9.2023 அன்று மாலை 5 மணி வரையில் செயல்முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஆர்வம் உள்ள நபர்கள் உடனடியாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமான நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும், 1-8-2023 அன்றைய தேதி படி, விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சமாக 63க்குள் இருக்க வேண்டும். அதோடு, வயது தளர்வு தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.short listing,practical test உள்ளிட்டவற்றின் மூலமாக இந்த பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
UR/EWS/ OBC,(NLC) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக 486 ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல எஸ்.சி, எஸ்.டி பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக 236 ரூபாய் செலுத்தினால் போதுமானது.