fbpx

“ அண்ணாமலை இல்ல.. மோடியும், அமித்ஷாவும் தான் இறுதி முடிவெடுப்பார்கள்..” கூட்டணி குறித்து இபிஎஸ் விளக்கம்..

கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது.. இந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.. இருகட்சிகளின் தலைவர்களும் அவ்வப்போது கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி தொடர்ந்தால், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டனாக பணியேற்றுவேன் என்று கூறியதாக வெளியான தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியது.. இதனால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டது.. ஆனால் சமீபத்தில் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று கூறியிருந்தார்..

இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார்.. ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி உறுதி, இறுதி என்று இப்போதே கூறிவிட முடியாது என்று கூறியிருந்தார்.. கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை என்றும், தேர்தலுக்கு 9 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது என்று தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றனர்.. மத்தியில் இருப்பவர்கள் தான் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வார்கள்.. மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல.. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டனர்..” என்று தெரிவித்தார்.. கூட்டணி குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த பதிலை தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

காணாமல் போன செல்போன் கோபுரம்…..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

Mon Apr 3 , 2023
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தை பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த செல்போன் கோபுரம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிலையில், செல்போன் கோபுர நிறுவன அதிகாரிகள், தாஜ்மல்ஹான் மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்ய […]

You May Like