கோடை விடுமுறை முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது.
ஆனால் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் ப்ளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையானது அல்ல எனவும், நிச்சயமாக பொது தேர்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த விதமான ஆலோசனையையும் தமிழக அரசு நடத்தவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது.