fbpx

கனமழைக்கு வாய்ப்பில்லை…!! எச்சரிக்கையை வாபஸ் பெற்றது வானிலை!!

தமிழகத்தில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தற்போது அதை வாபஸ் பெற்றுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’’தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது.எனவே இனி வரும் காலங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது. இருப்பினும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடமேற்கு திசைக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவே அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 21ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு!! 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி!!

Sat Nov 19 , 2022
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பணிச்சரிவில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றது. ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்படுகின்றது. நேற்று எல்லைக்கட்டுப்பாட்டு கேடு அருகே குப்வாரா மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் ராணுவ படையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். பிறர் தப்பிய நிலையில் 3 ராணுவ […]

You May Like