fbpx

ஷாக்…! அடுத்த 5 ஆண்டுக்கு மாறுதல் கிடையாது….! புதிய ஆசிரியர்களுக்கு அதிரடியாக பறந்த உத்தரவு…!

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; 757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை. ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (Deployment) செய்யப்பட வேண்டும்.

தற்போது பட்டதாரி ஆசிரியர் 2000 பணியிடங்களை நிரப்பி தேர்வு செய்யப்படும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.

அதோடு, மேற்காணும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்.

Vignesh

Next Post

தமிழகத்திற்கு அலர்ட்.‌‌..! மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை...!

Sun Dec 17 , 2023
தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், […]

You May Like