fbpx

நம்பிக்கை இல்லை!. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்!. பிரதமர் நெதன்யாகு அதிரடி!

Israel Defense Minister: நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

கடந்தாண்டு முதலில் இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கியது. காசா தாக்குதலை ஹிஸ்புல்லா எதிர்க்க அவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் கடந்த மாதம் இறுதியில் பதிலடி கொடுத்தது.

இருப்பினும், எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அஞ்சப்படுகிறது. இப்படி அங்குப் பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், திடீரென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்து அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சராக கேலன்ட் இருந்து வந்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ள நிலையில் கேலன்டிற்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில மாதங்களில் நம்பிக்கை இழந்துவிட்டேன். இதனால் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியான உடனேயே கேலன்ட் தனது ட்விட்டரில், “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் வாழ்வின் முக்கிய பணியாக இருந்தது.. இனிமேலும் அதுவே தான் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Readmore: Tn Govt: ஆமைகளை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி… ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை…!

English Summary

No hope!. Israel Defense Minister dismissed! Prime Minister Netanyahu action!

Kokila

Next Post

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Wed Nov 6 , 2024
A local holiday for Tuticorin district on the occasion of Surasamharam day

You May Like