fbpx

தூள்..! வந்தது GIS சாப்ட்வேர்… சுங்க சாவடியில் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்…!

தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை ஜிஐஎஸ் மென்பொருள் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்; சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை மேம்படுத்த, சுங்கச்சாவடிகளில் காத்திருப்பின் ‘நிகழ்நேர கண்காணிப்புக்காக’ ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான மென்பொருளை இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இதற்கு சுமார் 100 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. 1033 தேசிய நெடுஞ்சாலை உதவி மையம் மூலம் பெறப்பட்ட நெரிசல் குறித்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு சேவை படிப்படியாக மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

சுங்கச் சாவடியின் பெயர், இருப்பிடம் ஆகியவற்றை வழங்குவதைத் தவிர, வரிசை நீளத்தின் நேரடி நிலை, மொத்த காத்திருப்பு நேரம் சுங்கச்சாவடியில் வாகன வேகம் தொடர்பான விவரங்களை மென்பொருள் பகிர்ந்து கொள்ளும். சுங்கச்சாவடியில் வாகனங்களின் வரிசை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், நெரிசல் எச்சரிக்கை மற்றும் பாதை மாற்றுப் பரிந்துரையையும் இது வழங்கும்.

மேலும் வானிலை நிலைமைகள் மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் தொடர்பான புதுப்பிப்புகளையும் மென்பொருள் வழங்கும், இது போக்குவரத்து அதிகரிப்பை நிர்வகிக்கவும், சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உதவும்.

English Summary

No more long waits at the toll gate booth

Vignesh

Next Post

ஈரானிடம் இந்த ஆயுதம் கிடைத்தால் இஸ்ரேல் அழிந்துவிடும்!. டிரம்ப் எச்சரிக்கை!

Tue Sep 3 , 2024
If Iran gets this weapon, Israel will be destroyed, warns Trump

You May Like