fbpx

’இனி காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது’..!! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!!

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்துள்ளது.

பொதுவாக காவல்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது வழக்கம். இதன் காரணமாக, பேருந்து நடத்துனர்களுக்கும் காவல்துறையினருக்கும் அவ்வப்போது தகராறுகளும் ஏற்படும். அந்த வகையில் தான், நெல்லை மாவட்டத்தில் காவலருக்கும் நடத்துனருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More : இது என்ன Bi-Directional மின் மீட்டர்..? ரூ.5,011 கட்டணமா..? என்ன நன்மைகள்..? மின்வாரியம் அதிரடி..!!

English Summary

The transport department has ordered that policemen are not allowed to travel in the bus without paying.

Chella

Next Post

'கோவிட் நோயாளிகளின் நுரையீரலை குறிவைக்கும் உயிரணு பாதிப்பு.!' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

Wed May 22 , 2024
உயிரணு மரணத்தின் அசாதாரண வடிவமானது கோவிட் நோயாளியின் நுரையீரல் தீவிர சேதத்துடன் தொடர்புடையது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது, இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம். உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே தான் வாழ்ந்து வருகிறது என்று நிபுணர்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், […]

You May Like