fbpx

இனி பள்ளிக்கு மட்டம் போட முடியாது.. மாணவர்களுக்கு இப்படி தான் தண்டனை.!

திருத்தணி பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து சுமார் 1000மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்ற நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ரயில், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா என பொது இடங்களில் ஜாலியாக சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் திருத்தணியில் உள்ள மலைக் கோவிலில் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த தீயணைப்பு துறையினர் மாணவர்களை அழைத்து விசாரித்தனர். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த மாணவர்கள் மூன்று பேரையும் 15முறை தோப்புகரணம் போடும்படி தண்டனை வழங்கப்பட்டது.அத்துடன் ஒருவர் காதை மற்றொருவர் பிடித்தபடி தோப்புகரணமும் போடப்பட்டது. அவர்கள் தோப்புகரணம் போடும் பொழுதுலாம் நாங்கள் இனி பள்ளிக்கு ஒழுங்காக செல்வோம் என உறுதி மொழியும் எடுக்க வைத்தார்கள்.

அந்த மூன்று பேரையும் தீயணைப்பு துறையினர் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை அங்குள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Baskar

Next Post

4000 உதவிப் பேராசிரியர்கள் : விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்…

Wed Nov 9 , 2022
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் எழுத்து தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

You May Like