கோடை நெருங்கினாலே அனல் எங்கு சென்றாலும் துரத்தும். நிழல், தண்ணீர் இது மட்டுமே நம் இளைப்பாறலாக மாறும். இப்படிப்பட்ட சூழலில் குளுகுளு வென ஏசி அறையே கிடைத்தால் எப்படி இருக்கும்..? அது சொர்க்கத்தை காட்டிலும் மேலாக தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது வாய்க்கும்..? ஆனாலும் கவலையில்லை. கிடைக்கும் ஃபேன் காற்றை வைத்துக்கொண்டே குளுகுளு ஏசி உணர்வை பெறலாம். அதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்.
ஜன்னல்கள்: கோடை காலத்தில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். குறிப்பாக மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை திறந்து வைப்பது நல்லது. அந்த நேரத்தில் வரும் காற்று அறைகளை குளிர்விக்க செய்கிறது. அதுவும் அதிகாலை 3 முதல் 7 மணி வரை குளிர்ச்சியாக இருக்கும். ஜன்னல்களைத் திறந்தால் கொசுக்கள் வரும் என்று நினைப்பவர்கள். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்திக் கொள்ளலாம்.
திரைச்சீலைகள் மற்றும் சன் ஷேட்கள்: ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் மற்றும் சன் ஷேட்கள் அமைப்பது நல்லது. இவை நேரடியாக சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காது. அதே சமயம், காற்று வரும்போது காற்றை வீட்டுக்குள் கொண்டுவரும். இந்த திரைச்சீலைகள் வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நிறங்கள் சூரியனிலிருந்து வரும் சக்திவாய்ந்த வெயிலை அவ்வளவு எளிதில் உறிஞ்சாது.
மின்விசிறிகளைப் பயன்படுத்தவும்: வீட்டில் டேபிள் ஃபேன்களுடன் சீலிங் ஃபேன்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தால் இரண்டையும் பயன்படுத்தவும். டேபிள் ஃபேன் எல்லா திசைகளிலும் சுழலுகிறது. சீலிங் ஃபேன்களின் மூலம் காற்று மொத்தமாக பரவுகிறது. இவ்வாறு இரண்டையும் ஒன்றாக உபயோகிப்பதன் மூலம் வெப்பக் காற்றை குறைக்க முடியும்.
தண்ணீரைப் பயன்படுத்தவும்: திரைச்சீலைகள் மற்றும் ஜன்னல்களில் தண்ணீரை தெளிக்கலாம். இன்னும் எளிதாக்க இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலைப் பயன்படுத்தலாம். இவ்வாறு தண்ணீர் தெளிப்பதால் உள்ளே வரும் காற்று குளிர்ச்சியடைகிறது. அதனால் வெளியிலிருந்து வரும் வெப்பமான காற்று அறைக்குள் வரும்போது நமக்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் அறையும் குளிர்ச்சியடைகிறது.
இதையும் படிக்கவும்: https://1newsnation.com/summer-is-approaching-dont-use-ac-only-like-this-big-danger/
செடிகளைப் பயன்படுத்தலாம் : முடிந்தவரை செடிகள் மற்றும் மரங்களை வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் வளர்க்கவும். அவை எளிதில் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக்கும் தன்மையுடையவை. குறிப்பாக உட்புறம் வளர்க்கும் தாவரங்கள் அறையை குளிர்ச்சியாக்க பெரிதும் உதவும். அதனால் வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியைக் கொடுக்கும் அத்தகைய தாவரங்களை வளருங்கள்.
இயற்கை காற்று குளிரூட்டிகள்: இயற்கை காற்று குளிரூட்டிகளை பயன்படுத்தவும். அதாவது, மண் பாத்திரங்கள், பானைகள், பீங்கான் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி அறைகளில் அங்கும் இங்கும் வைக்கவும். மின்விசிறிக்கு அருகில் வைக்கவும். அதனால் நீர் ஆவியாகி காற்றில் குளிர்ச்சியைக் கொண்டுவருகிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள் உபயோகத்தை குறைக்கவும்: முடிந்தவரை வீட்டில் டிவி, மின் விளக்குகள் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதைக் குறைக்கவும். அவை வெப்பத்தை உருவாக்குகின்றன. அதனால் அறையில் வெப்பம் அதிகரிக்கும். இவை தவிர மொட்டை மாடியில் தென்னை இலைகள், புல், செடிகளை வளர்க்கலாம். முக்கியமாக கொடிகள் பெரிய இலைகளை கொண்டிருப்பதால் மொட்டை மாடியில் பரவி நன்கு நிழல் தரும். இதன் மூலம் சூரிய ஒளி மொட்டை மாடி வழியே வீட்டிற்குள் ஊடுருவுவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.