fbpx

கடைகளில் பில் செலுத்தும் போது செல்போன் எண் கொடுக்க வேண்டிய அவசியமில்லை!… மத்திய அரசு!

பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் பில் போடுவதற்கு செல்போன் எண் கேட்கப்படுகிறது. உதாரணமாக மால்களில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் போன் நம்பர் கேட்கப்படுகிறது. பெரிய கடைகளிலும் போன் நம்பர் கொடுத்தால்தான் பில் போடுவோம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பலரும் போன் நம்பரை பகிர விரும்புவது இல்லை. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் சட்ட விதிகளை சொல்லி.. நம்பரை கொடுக்க மாட்டோம் என்று கூறினாலும் கூட.. நம்பர் கொடுத்தால்தான் பொருட்களை கொடுப்போம் என்று சொல்லும் நிலையும் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் கட்டணம் செலுத்தும்போது தொலைபேசி எண்ணைக் கேட்பது வழக்கம். இருப்பினும், சிலர் இது போன்ற எண்களை கொடுப்பது பற்றி கவலைப்படுகிறார்கள். தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர்கள் இணைய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும் என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பில் செலுத்தும் போது மொபைல் எண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

கொரோனாவை விட கொடிய நோய் "X"!…. 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடியது!… இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கை!

Mon Sep 25 , 2023
50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய நோய் X என்ற தொற்றுநோயைப் பற்றி இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் 2.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைவதற்குள் மீண்டும் ஒரு கொடிய நோய் பற்றி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அந்த நோயை X என்ற அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 50 மில்லியன் மக்களை கொல்லக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1918-1920 […]

You May Like