fbpx

“தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாது” பிரதமருக்கு ஸ்டாலின் ஆறுதல்..

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடியின் தயார் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தும், பிரதமருக்கு ஆறுதல் தெரிவித்தும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்தப் பதிவில் “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் அன்புக்குரிய தாய் ஹீராபென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம்.

தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

Kathir

Next Post

அட கடவுளே...! கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்...! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Fri Dec 30 , 2022
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு […]

You May Like