fbpx

2000 ரூபாய் நோட்டுகளை இனி யாரும் மாற்ற முடியாது!… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றி வரும் நிலையில் இந்த பணியை மேற்கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று தற்போது அறிவித்துள்ளது. இ வர்த்தகத் தளத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்யும் போது cash on delivery என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம். இந்த நிலையில் ஊழியர்கள் பொருட்களை வாங்கும் போது மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தருவதால் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Kokila

Next Post

அக்கவுண்டில் பணம் இல்லாவிட்டாலும் பணப்பரிமாற்றம் செய்யலாம்!… யுபிஐ-யில் இப்படி ஒரு வசதியா?… RBI அதிரடி!

Sat Sep 16 , 2023
பயனர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், யுபிஐ மூலம் கிரெடிட் தொகையைப் பெற்று செலவு செய்யலாம் என்ற புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் மூலமாக யுபிஐ பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயர்கிறது. இந்நிலையில் யுபிஐ பயனர்களின் வசதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு […]

You May Like