fbpx

”ஜம்மு காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்”..!! அமெரிக்கா விடுத்த பரபரப்பு எச்சரிக்கை..!!

இந்தியாவுக்கு பயணம் செய்யும் அமெரிக்க மக்கள், மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளான ஜம்மு – காஷ்மீர் பகுதியில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால், அமெரிக்கா இந்த எச்சரிக்கையை அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தீவிரவாதம் மற்றும் குற்றம் அதிகம் காணப்படுவதால், அந்தப் பகுதிகளுக்கு செல்வோர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சில பகுதிகளில் மிக அதிகமான அபாயம் உள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம். அந்த பகுதிகள் தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இதேபோல் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளான மணிப்பூர் பகுதிக்கும் செல்ல வேண்டாம். அங்கு வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக உள்ளது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. எனவே சுற்றுலா தளங்கள், பேருந்து, விமானம், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், அரசு சேவை வழங்கும் பகுதிகளில் சுற்றுலா வரும் பயணிகளை சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

Read More : பெரும் சோகம்..!! முன்னாள் எம்பியும் பாஜக மூத்த தலைவருமான பிரபாத் ஜா காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

English Summary

The US has urged American citizens traveling to India not to travel to Manipur and Jammu and Kashmir.

Chella

Next Post

ரூ.3,160 குறைந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

Fri Jul 26 , 2024
Due to reduction in customs duty on gold and silver in the central budget, its prices are continuously decreasing.

You May Like