கர்நாடக மாநிலம் தும்மகூர் மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ்+ 22) என்ற இளைஞர் கடன் 2015 ஆம் வருடம் இளம் பெண் ஒருவரை கொலை செய்து அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது இந்த வழக்கு விசாரணை துமகூறு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றவாளி ஆன ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், பிணத்துடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகால சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதோடு இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டிருக்கிறார். இது சட்டப்படி குற்றமாகும் அல்லது குற்றம் இல்லையா சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத இயலாது. அதனால் இந்திய தண்டனைச் சட்டம் 375, 377 இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளுதல் உள்ளிட்டவை குற்றமாக பொருந்தாது 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் இல்லை இதனால் இறந்து போன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றமாகாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இறந்து போன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் வீரப்ப மட்டும் வெங்கடேஷ் நாயக் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.