fbpx

அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது…! பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!

மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில்; மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க அனுமதிக்க கூடாது. அரசுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியவர்களை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அவர்கள் பேச உள்ள பொருள் குறித்து முன்னரே முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது. அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது. தலைமையாசிரியர்கள் அனைத்து அறிவுரைகளையும் புரிந்து கொண்டு பள்ளியில் பிரச்சனை இல்லாமல் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

No politician should be allowed in school

Vignesh

Next Post

2029 முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்!. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாரான மோடி அரசு!

Mon Sep 16 , 2024
Simultaneous elections across the country from 2029! Modi government ready for one country one election!

You May Like