கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த துயரமான சூழலைப் பயன்படுத்தி அந்தப் பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை அழித்ததும், பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதும், பள்ளி உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத சமூக விரோதச் செயல்.
இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் எந்த நிறுவனத்திலும் நடைபெறாத வண்ணம், தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விதிகளை உருவாக்கி அரசாணை பிறப்பித்திட வேண்டும். இது குறித்து தமிழ்நாட்டிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இன்று தனியார் பள்ளி நிர்வாகிகளும், தனியார் பள்ளி பெற்றோர் சங்கங்களும் சேர்ந்து மனு அளிக்க உள்ளதாகவும்,. இதனால் இன்று தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது என தெரிவித்துள்ளார். அதே போல கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமாரும் அறிவித்துள்ளார்.
Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!