fbpx

மின் கட்டண மானியம் ரத்து … அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அறிவிப்பு ….

டெல்லியில் இதுவரை மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் கட்டணத்தில் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , ’’டெல்லி அரசு கடந்த 2015ம் ஆண்டு முதல் மக்களுக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மானியம் ரத்து செய்யப்படுகின்றது. ஆனால் , மானியம் வேண்டும் என நினைப்பவர்கள்  மானியத்திற்காக முன்பதிவு செய்ய வேண்டும். யாருக்கு மானியம் வேண்டாமோ அவர்கள் பதிவு செய்யத் தேவையில்லை. இதை மிக எளிமையான முறையில் செல்போனில் ’வாட்ஸ்ஆப்பிலேயே ’ பதிவு செய்யலாம். என கூறியுள்ளார். 200 யுனிட் வரை இலவ மின்சாரம் மற்றும் 400 யூனிட் வரை 50சதவீத மானியம் பெறும் வசதி உள்ளது. இதை வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப்பில் மானியத்திற்கு பதிவு செய்ய முடியாதவர்கள் அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்து கொள்ளலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஓனரின் அனுமதியுடன் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். 7011311111 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வாட்சப்பில் பதிலை தொடர முடியும். ஆங்கிலம் அல்லது இந்தி மொழியை தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் வாட்சப்பில் சிஏ எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கேட்கும். இதை நாம் எஸ் என கொடுத்ததும் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.

Next Post

’’ மணப்பெண் தேவை ’’ நீங்க வந்தா மட்டும் போதும் ..என வரதட்சணைக்கு எதிராக நூதன பிரசாரம்…..!

Wed Sep 14 , 2022
நாகர்கோவிலில் பேருந்து நிலையத்தில் மணப்பெண் தேவை என்ற பலகையுடன் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மணமகன் கோலத்தில் இளைஞர்கள் நூதன பிரசாரம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நாகர்கோவில் மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்குறியைச் சேர்ந்த ஜெனிஷ் , சுமிஷ் ஆகிய இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்களின் கவனத்தை ஈர்த்தனர். பட்டு வேட்டி , பட்டு சட்டை அணிந்து கொண்டு கையில் பலகைகளுடன் ஏதோ கூறிக் கொண்டே பேருந்து […]

You May Like