fbpx

மக்களே டைம் இல்ல..!! பான் கார்டில் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம்..!! இதை பண்ணுனா போதும்..!!

பான் கார்டில் முக்கியமான விவரங்களை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது. நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.

லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு கட்டாயம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது. இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பலமுறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். இந்த ஆதார் இணைப்பிற்கு இடையில்தான் பான் கார்டில் பலரும் முக்கியமான மாற்றங்களை செய்ய விரும்புவார்கள். சிலர் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய தெரிந்த பலருக்கும் பான் கார்டில் எப்படி மாற்றங்களை செய்வது என்று தெரியாது.

பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும். உதாரணமாக பான் கார்டில் முகவரியை எப்படி மாற்றுவது என்று இங்கே பார்க்கலாம்.

— பான் கார்டில் முகவரி மாற்ற UTI Infrastructure Technology and Service Ltd (UTIITSL) போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் உட்பட பல்வேறு பான் கார்டு தொடர்பான சேவைகளுக்கான பிரத்யேக தளமாக இந்த போர்டல் செயல்படுகிறது.

— UTIITSL போர்ட்டலில், நீங்கள் “Change/Correction in PAN Card” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும், அதைத் தொடர்ந்து Apply for Change/Correction in PAN Card Details” என்பதைத் தேர்ந்தெடுத்து “Next” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

— அடுத்த பக்கத்தில், நீங்கள் உங்களின் பான் எண்ணை கொடுத்து, “Aadhaar Base e-KYC Address Update” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் பான் கார்டின் முகவரியை ஆதார் கார்ட் முகவரி அடிப்படையில் ஒவ்வொரு முறையும் எளிமையாக அப்டேட் செய்ய முடியும்.

— அடுத்து, “Submit” என்பதை அழுத்துவதற்கு முன், உங்களின் ஆதார் எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.

— Submit முடிந்ததும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு OTP அனுப்பப்படும். இதை கொடுத்ததும் மாற்றங்கள் அப்டேட் ஆகிவிடும்.

Chella

Next Post

ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்துகிறது……! எடப்பாடி பழனிச்சாமி வருத்தம்…..!

Tue Jun 13 , 2023
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் என்று கூட சொல்லலாம் என அவர் கூறினார். […]

You May Like