ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம்.. அரசு அதிரடி அறிவிப்பு..

விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் சாமானிய மக்களுக்கு பெரும் நிவாரணமாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவச எல்பிஜி சிலிண்டர்களை அரசு அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் ஒரு வருடத்தில் 3 எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரகாண்ட் அரசு இந்த ஆண்டு மே மாதம் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க முடிவு செய்தது. இலவச எல்பிஜி சிலிண்டர் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.55 கோடியை மாநில அரசு ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது..

இன்று நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சுக்பீர் சிங் சந்து, இந்த முடிவால் மொத்தம் 1,84,142 அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறினார். மேலும் இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பெற உத்தரகாண்ட் அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது..

இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பெற என்னென்ன நிபந்தனைகள்..?

  • பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும்.
  • மேலும் தகுதியான பயனாளி அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்
  • அந்த்யோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர் எரிவாயு இணைப்பு அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் இலவச எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுவது எப்படி..?உத்தரகாண்ட் அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பினால், இந்த மாதத்திற்குள் அதாவது ஜூலை மாதத்திற்குள் உங்கள் அந்த்யோதயா அட்டையை இணைக்கவும். இரண்டையும் இணைக்கவில்லை என்றால், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் பயன் பெற முடியாது.. உத்தரகாண்ட் அரசு இத்திட்டம் தொடர்பான அனைத்து தரைப் பணிகளையும் முடித்துள்ளது.

மாநில அரசு அந்த்யோதயா நுகர்வோர் பட்டியலை மாவட்ட வாரியாக தயாரித்து, உள்ளூர் எரிவாயு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. எனவே அந்தியோதயா கார்டுதாரர்களின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதை தங்களது எரிவாயு இணைப்புகளுடன் இணைக்க வேண்டும்.

Maha

Next Post

#FlashNews : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் நியமனம்.. தப்பியோடிய கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு...

Wed Jul 13 , 2022
இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ளார்.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. […]
’இலங்கையில் முடிவுக்கு வருகிறது அவசரநிலை பிரகடனம்’..! - அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

You May Like