fbpx

அசைவ பிரியர்களே உஷார்!. இறைச்சிகளில் 70% ஆண்டிபயாடிக் மருந்துகள் சேர்ப்பு!. உலகளவில் இடம்பிடித்த இந்தியா!. ஆய்வில் அதிர்ச்சி!

Meats: பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளால், மனிதர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சியில், உலகம் முழுவதும் 70% ஆண்டிபயாடிக் மருந்துகள் பண்ணை விலங்குகளுக்கு கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியான பயன்பாடு தொடர்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் எந்தளவுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை ஒரு கிலோ இறைச்சியை கொண்டு ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர்.

அதில், செம்மறி ஆடுகளுக்கு அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ செம்மறி இறைச்சியில் 243 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்து சேர்க்கப்படுகிறது. ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு 173 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்துகளும், மாடுகளின் ஒரு கிலோ இறைச்சிக்காக 60 மில்லி கிராமும், கோழி இறைச்சிக்காக 35 மில்லி கிராமும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவது, 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பண்ணை விலங்களுக்கான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் சர்வதேச அளவில் இந்தியா 30 ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: விஞ்ஞான உலகில் அதிசயம்!. கருவின் மூளையை 3D ஸ்கேன் செய்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்!.

Kokila

Next Post

நெல்லிகாய் Vs கற்றாழை : ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு எது சிறந்தது?

Thu Dec 12 , 2024
Aloe Vera vs Amla: Which Is better for healthy, strong hair?

You May Like