இந்தியா முழுவதும் இருக்கின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்காக தமிழகத்தை நாடி வருகிறார்கள். அப்படி தமிழகத்தை நாடி வரும் புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அந்த வகையில், திருவள்ளூர் அருகே இருக்கின்ற புதுச்சத்திரம் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்கள். அதைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான ராஜேஷ் (31) என்பதால் செங்கல் சூளை பணிக்காக அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ராஜேஷ் செங்கல் சூலை உரிமையாளரிடம் மொத்தமாக ஊதியத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்து வந்திருக்கிறார் எனவே அங்கு பணி புரியும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த மூன்று மாத காலமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியம் கொடுக்காமல் ராஜேஷ் அலக்கழித்து வந்ததாக தெரிகிறது.
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள கொடுக்கவேண்டிய பணத்தை கேட்டு நேற்றைய தினம் சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். அந்த சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜேஷை இரும்பு கம்பியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வெள்ளவேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு ராஜேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையின் அடிப்படையில், சதீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான சச்சின், இஷாத் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.