fbpx

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது!. உச்சநீதிமன்றம்!

Supreme court: வழக்கில் ஆஜராக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது. இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ராவை, நீதிமன்றத்துக்கு உதவும் ‘அமிகஸ் கியூரி’யாக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமிகஸ் கியூரி சித்தார்த் லுாத்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்கிறோம். அதன்படி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

வாட்ஸாப் போன்ற மின்னணு முறைகளை பயன்படுத்தி நோட்டீஸ் அனுப்ப கூடாது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களுடைய போலீஸ் அமைப்புகளுக்கு இதை முறையாக தெரிவிக்க வேண்டும்.நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டதன் விபரங்கள் தொடர்பான அறிக்கையையும் உயர் நீதிமன்றங்கள் தாக்கல்செய்ய வேண்டும். இதை அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Readmore: திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் குழந்தைகளை அனுமதிக்க கூடாது…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

English Summary

Notices should not be sent to accused persons through WhatsApp! Supreme Court!

Kokila

Next Post

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து... அண்ணாமலை & மத்திய அமைச்சருக்கு நாளை பாராட்டு விழா...!

Wed Jan 29 , 2025
Aritapatti tungsten mine auction cancelled... Annamalai & Central Minister to be felicitated tomorrow

You May Like