காரில் பயணம் செய்யும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக சீட் ஒன்றை Babyark நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சீட், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சீட்டாக கருதப்படுகிறது.
நவீன காலத்திற்கேற்ப புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில், புது புது அம்சங்களுடன் கூடிய வகையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு ரகங்களில் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திவருகின்றன. அந்த வகையில் காரில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் Babyark என்ற நிறுவனம் தற்போது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக சீட் ஒன்றை தயாரித்துள்ளது
கார்பன் பைபர் கொண்டு சீட் தயாரிக்கப்பட்டள்ள இந்த சீட், பல உயர்ரக பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த சீட் 49 இன்ஜ் உயரமும், இதன் எடை 1.8 கிலோ. இந்த சீட்டை முன்பக்கமாகவும், பின் பக்கமாகவும் அட்ஜெட் செய்து வைத்து கொள்ளலாம். மேலும், இந்த சீட்டை முறையாக காரில் பொருத்தினால் குழந்தைகள் அமர வசதியாக இருக்கும் என்பதால், இது உலகிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான சீட்டாக கருதப்படுகிறது.
மேலும், இதன் தரம் குறித்து 200 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சீட்டிற்கு 10 வருட மெயின்டனஸ் மற்றும் சர்வீஸ் இலவசமாக Babyark நிறுவனம் செய்து கொடுக்கிறது. இந்த சீட்டை பெற வேண்டுமானால் முன்பதிவு செய்து பெற்று கொள்ளவேண்டும். இதன் விலை ரூ.81,000 முதல் ரூ.97,500 வரை விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.