நாடு முழுவதும் புதிய வங்கிச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த மாற்றம் ஏடிஎம் பணம் எடுக்கும் கொள்கைகள், சேமிப்புக் கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் 1 முதல் வங்கி சேவைகளில் அதிரடி மாற்றங்கள் :
➥ ATM பரிவர்த்தனை கட்டணங்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள நிலையில், பல வங்கிகள் ஏடிஎம் கட்டணங்களை திருத்தியுள்ளன. ஒரு மாதத்திற்கு ஏடிஎம்மில் இலவசமாக எந்த கட்டணமும் இன்றி பணம் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பிற வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுக்கும்போது ஒரு மாதத்திற்கு 3 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➥ அதேபோல், அனைத்து சேமிப்புக் கணக்கையும் பராமரிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும். metro, urban, semi-urban, or rural போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வங்கிகளை பொறுத்து இது மாறுபடலாம்.
➥ ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத யுபிஐ கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்படும். மேலும், கணக்கிற்கான UPI சேவைகள் இடைநிறுத்தப்படும்.
➥ வங்கி மோசடியை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி Positive Pay System முறையை செயல்படுத்த உள்ளது. அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் காசோலைகளை வழங்கும் வாடிக்கையாளர்கள், பயனாளிகளுக்கு அவர்கள் வழங்கிய காசோலைகள் பற்றிய முக்கிய விவரங்களை மின்னணு முறையில் வங்கிக்கு வழங்க வேண்டும்.
➥ ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முக்கிய வங்கிகள் கிரெடிட் கார்டு விதிகளை திருத்தவுள்ளன. இது Rewards, கட்டணங்கள் போன்ற பலவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளது. SBI SimplyCLICK Swiggy வெகுமதிகளை 5X ஆக பாதியாகக் குறைத்தும், Air India Signature புள்ளிகளை 30இல் இருந்து 10ஆகக் குறைத்தும் அமல்படுத்தப்பட உள்ளது.
➥ வங்கி சேவைகளில் AI பயன்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் அம்சங்கள் மற்றும் AI சாட்பாட்களை அறிமுகப்படுத்தப்படுகின்றன.