fbpx

இனி ஐபிஎல்லில் இந்த விதிகள்தான்!… மெகா ஏலத்தில் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்?… பிசிசிஐ முடிவு!

IPL Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாகவும், வீரர்களை தக்கவைப்பது தொடர்பாகவும் பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒவ்வொரு மெகா ஏலமும் நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Readmore: உஷார்!… பறவைக்காய்ச்சல் தாக்கம் எதிரொலி!… உடனே தெரிவியுங்கள்!… மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Kokila

Next Post

ஏசி ரூமில் புகைபிடிப்பது மிகவும் ஆபத்து!! இதயம், மூளை மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும்!!

Sat Jun 1 , 2024
ஏசி அறையில் புகைபிடிப்பது ஆபத்தானது. அது உங்கள் இதயம், மூளை மற்றும் சிறுநீரகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். புகைபிடித்தல் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஆனால் கடுமையான வெப்பத்தில், அது இரண்டு மடங்கு தீங்கையை விளைவிக்கும். ஏசி அறையில் உட்கார்ந்து சிகரெட் புகைத்தால், அது இன்னும் ஆபத்தானது. இது உடலின் குளிரூட்டும் செயல்முறையை பாதிக்கிறது. மேலும் வெப்பம் காயம் ஏற்படும். அதிக வெப்பம் காரணமாக ஏசிகளில் தீப்பற்றி […]

You May Like