உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
அந்த வகையில் தற்போது புதிய அம்சத்தை வெளியிட வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியாறமலே contacts-ஐ எடிட் செய்யவும் அல்லது சேர்க்கவும் முடியும்.. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. இது பயனர்களை செயலியை விட்டு வெளியேறாமல் தொடர்புகளை சேர்க்க அல்லது அவர்களின் தகவல்களைத் திருத்த அனுமதிக்கிறது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இப்போது வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் தங்கள் தொடர்பு பட்டியலில் அல்லது கூகுள் கணக்கில் புதிய தொடர்புகளை எளிதாக சேர்க்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. கூறினார்.
இந்த புதிய அம்சம் இந்த அம்சம் நிச்சயமாக பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. தற்போது வாட்ஸ்அப்பின் சமீபத்திய சில பீட்டா பதிப்பில் இந்த அம்சம் உள்ளது.. வரும் நாட்களில் இது மேலும் பலருக்கும் அறிமுகப்படுத்தப்படும்.