fbpx

இனி எக்ஸ் (ட்விட்டர்) தளத்திலும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்..!! மொபைல் நம்பரே தேவையில்லை..!! எலான் மஸ்க் அறிவிப்பு

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். தினசரி பல கோடி பேர் இந்த ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தைக் கடந்தாண்டு தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார். தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று பெயர் மாற்றினார். எலான் மஸ்க் இதைத் தனது கனவு பிராஜ்க்டாக கருதுகிறார்.

இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் வரும் ஒரு அட்டகாசமான வசதி குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது, விரைவில் ட்விட்டர் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலை கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் மொபைல் எண்கள் இல்லாமலேயே நாம் எந்தவொரு நபருடனும் பேச முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப், டெலிகாரம் போன்ற செயலிகளில் இந்த வசதி இருக்கும் நிலையில், இதை ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில், “விரைவில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வீடியோ & ஆடியோ அழைப்புகள் வருகிறது. ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கணினி, விண்டோஸ் கம்பியூட்டர் என அனைத்திலும் இது வேலை செய்யும். இதில் கால் செய்ய மொபைல் எண் தேவையில்லை. எக்ஸ் தளத்தில் ஏற்கனவே உலகளவில் இருக்கும் முக்கிய நபர்கள் உள்ளனர். எனவே, இந்த கால் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ட்விட்டர் தளத்தில் புரட்சிகரமானதாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

செல்போனை சர்வீஸ் செய்ய கொடுக்கும்போது கவனம்..!! அந்தரங்க படங்களை திருடியதால் பெண் அதிர்ச்சி..!!

Thu Aug 31 , 2023
சிங்கப்பூரில் உள்ள Bugis சந்திப்பில் ஹைடெக் மொபைல் என்ற கடையில் செயல்பட்டு வருகிறது. இங்கு லூ என்பவர் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021 ஜனவரி 10ஆம் தேதி, பெயர் குறிப்பிடப்படாத அந்த வாடிக்கையாளர் (30 வயது நபர்), தற்செயலாக உடைந்து போன தனது போனை சர்வீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு வேலைகள் அதிகமாக இருந்ததால், அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண், அவருடைய போனை அந்த கடையில் ரிப்பேர் […]

You May Like