fbpx

எல்லாம் உஷார்.. 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் எச்சரிக்கை…! 5 மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்…! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18,19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: Monkey pox: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி…! தடுக்க ஒரே வழி இதை கடைபிக்க வேண்டும்….!

Vignesh

Next Post

தனி கல்விக் கொள்கை பற்றி செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்...! குழுவின் தலைவர் அறிவிப்பு...!

Sat Jul 16 , 2022
தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம் இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், […]

You May Like