fbpx

இனி ரூ.17,500 சேமிக்க முடியும்…! மாத ஊதியம் வாங்கும் நபர்களுக்கு அட்டகாசமான வரி சலுகை…!

அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக புதிய வரி நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மாதச் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் விதமாக, புதிய வரி நடைமுறைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிரந்தர கழிவு, 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி தனிநபர்களும், ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

புதிய வரி நடைமுறைகளின்படி, ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. 3 முதல் 7 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 10 சதவீதமும், 10 முதல் 12 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 15 லட்ச ரூபாயும், 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும். இதன் மூலம் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு புதிய வரி நடைமுறையின் படி ரூ.17,500 சேமிப்பாக கிடைக்கும்.

English Summary

Now you can save Rs.17,500…! Huge tax benefit for monthly salary earners

Vignesh

Next Post

கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் பயன்படுத்தக் கூடாது...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Wed Jul 24 , 2024
The Madras High Court has directed schools not to use alternative certificates to collect fees.

You May Like