fbpx

Shocking | ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 288-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் 10 பேர் கொண்ட சிபிஐ குழு பாலசோர் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மூன்று ரயில் விபத்து குறித்து 7-ம் தேதி விசாரணையைத் தொடங்கினர். விபத்து நடந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததில், கணினி முறையில் இயங்கும் இன்டர் இன்டர்லாக்கிங் அமைப்பை மூடிவிட்டு, கிரீன் சிக்னல் கொடுத்ததால் இந்தவிபத்து நேர்ந்துள்ளது என சிபிஐ முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

என்ன நடந்தது!... கண்ணிமைக்கும் நேரத்தில் கேமரூன் கிரீன் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!... வைரலாகும் வீடியோ!

Sun Jun 11 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் 65 ஓவர்கள் முடிவில் ஆஸ்ரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா மிகவும் அருமையாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனென்றால், இரண்டாவது இன்னிங்சில் இதுவரை ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக நிதானமாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் விக்கெட்டையும் ஜடேஜா தான் வீழ்த்தினார். 62-வது ஓவரை ஜடேஜா வீச […]

You May Like