fbpx

மனைவியின் நிர்வாண உடலுடன் பூஜை! ஒரிசா மந்திரவாதியை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு  சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்  அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட இவர்  தனது மனைவியை  கொலை  செய்ததாக காவல்துறை கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில்  பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி அஸ்தாம்மா கட்டுவா தனது மனைவி மம்தா  கட்டுவாவை கொலை செய்து அவரது உடலை நிர்வாணமாக்கி அதை வைத்து பூஜை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அஸ்தாமா கட்டுவாவை கைது செய்தனர். மேலும்  தனக்கு அதிக மாந்திரீக சக்தி வேண்டி தனது மனைவியை பலி கொடுத்து அவரது நிர்வாண உடலை வைத்து பூஜை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர்  அந்த கிராம மக்களிடமும் தன் மனைவியின் உடலை வைத்து சிவராத்திரி அன்று பூஜை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள காவல் துறை இது பற்றி மேலும் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஸ்தாமா கட்டுவாவின் சகோதரர்  சிவா கட்டுவா தனது அண்ணன் பூஜை செய்வார் என்று தெரியும் ஆனால்  அவரது மனைவியை  பலி கொடுத்து பூஜை செய்வார் என்று தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

வெளிநாட்டில் வேலை வேண்டுமா? 91 லட்சம் ரூபாய் பேஸ்புக் மூலம் நூதன மோசடி! ஆவடியைச் சார்ந்தவர் கைது!

Sat Feb 18 , 2023
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து  அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து  91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை  சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம்  மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர்  சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் சார்ந்த அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த நிறுவனத்தில்  ஆவடி காமராஜ் […]

You May Like