fbpx

அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைப்பு..! மாணவி விபரீத முடிவு! விடிய விடிய போராட்டம்!

தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்தது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத் அசோக்நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இளம்பெண் பிரவலிகா தற்கொலை செய்து கொண்டார். குரூப் 2 தேர்வை தெலுங்கானா பிஆர்எஸ் அரசு ஒத்திவைத்ததால் விரக்தி அடைந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுக்காக  வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார். திடீரென தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. பெரும் கவலையில் இருந்த பிரவலிகா, தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அசோக்நகரில் இளம்பெண் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்த விடுதி அருகே ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டும் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உங்கள் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறதா…? இந்த நம்பருக்கு போன் போடுங்க….!

Sun Oct 15 , 2023
தமிழ்நாட்டில் கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. அதில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய நோயாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளனர். ஆகவே மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி வார்டு மற்றும் சிறப்பு முகாம்கள் என பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொசு உற்பத்தி ஆவதை தடுப்பது எப்படிஎன்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். […]

You May Like