fbpx

’ஐய்யோ என்ன விட்ருங்க’..!! 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பெரியப்பா மகன்..!! மேலும் இருவர் கூட்டு..!!

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவுக்கார பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில், 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். சிறுமியை பார்க்க வந்த உறவுக்கார பெண் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 6 மாத காலம் தொடர்ந்து இந்த கொடூரம் நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சென்னை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து போக்சோ வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள குமார் எனும் டெய்லரை கைது செய்தனர். பின்னர், மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் பெரியப்பா மகன் 16 வயது சிறுவனும், அவனது நண்பனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read More : சொந்தமா தொழில் தொடங்க போறீங்களா..? ரூ.5 கோடி வரை கடன் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

English Summary

The incident of rape of an 11-year-old girl by a boy relative and two others including his friend has caused great shock.

Chella

Next Post

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி ; சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி பெயரில் 3000 போலி விண்ணப்பங்கள்!!

Tue May 28 , 2024
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்ட நிலையில் 3000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் […]

You May Like