2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் மாசுபட்ட நகரங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070 ஆம் ஆண்டு நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய 40 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க பொருட்களிலிருந்து உற்பத்தி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. 2030க்குள், மின்சார நகரப் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்… 2024ஆம் ஆண்டு முதல் நகரப் போக்குவரத்துக்கான டீசல் பேருந்துகளை சேர்க்கக் கூடாது” என்று மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குழு தெரிவித்துள்ளது.