தற்போது உள்ள காலகட்டத்தில், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது எண்ணெய் தான். இடலில் ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளை குணமாக்க முக்கிய பங்கு வகிப்பது நமது உணவு பழக்கம் தான். குறிப்பாக எண்ணெயில் பொரித்து உண்ணப்படும் ஜங்க் உணவுகளால் மக்களின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனென்றால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, உடலில் கொழுப்புக்கள் வேகமாக அதிகரிக்கிறது.
அதே சமயம் நாம் வீடுகளிலும் சரியான எண்ணெய்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் சந்தைகளில் தற்போது பல விதமான எண்ணெய்கள் இருப்பதால், எதை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போது பலரும் தங்களின் ஆரோக்கியத்தில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். ஆனால் எது சரியானது என்பதை அவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை.
இனி கவலையே வேண்டாம், உடலுக்கு நன்மை தரும் எண்ணெய் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள். ஆம், எண்ணெய் உடலுக்கு நன்மை தரும், அது நாம் பலரும் அறிந்த நல்லெண்ணெய் தான். நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால், இது மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறைவது மட்டும் இல்லாமல், தலைமுடி வறட்சி மற்றும் பொடுகு முற்றிலும் நீங்கும்.
நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடலுக்கு வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய் முதலியவற்றை இந்த எண்ணெய் குணமாக்கும். அது மட்டும் இல்லாமல், நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளை தடுக்கிறது. இதற்கு நீங்கள், தினமும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை பஞ்சு தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு தழும்புகளும் குறையும். அல்லது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்று குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம் கை கால்களில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால் சருமம் வறட்சி அடைவதை தடுக்கலாம். இதனால் தான், நமது முன்னோர் அடிக்கடி நல்லெண்ணெய் தேய்த்து குளித்தார்கள்.
இந்த எண்ணெய், அழகிற்கு மட்டும் இல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பெரிது உதவும். ஆம், நல்லெண்ணெயில் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருவது உண்டு. குறிப்பாக, எலும்புகளை வலுப்படுத்தும், இதய நோய் ஏற்படுவதை தடுக்கும், மூட்டுகளில் உள்ள தேய்மானத்தை குறைக்கிறது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.