திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள பலி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மேலும், திடீரென சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் வகுப்பு ஆசிரியை சிறுமியை ஓய்வெடுக்க கூறியுள்ளார்.
இதனால் சிறுமி, தனது வகுப்பில் படுத்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது, அந்த வழியாக பள்ளி தலைமை ஆசிரியர், ரவுண்ட்ஸ் வந்துள்ளார். சிறுமி படுத்திருப்பதை பார்த்த அவர், வகுப்பு ஆசிரியையிடம் விசாரித்துள்ளார். அப்போது வகுப்பு ஆசிரியை, சிறுமி காலையில் இருந்தே சோர்வாக இருப்பதாகவும், இடையில் வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், சிறுமியை அருகில் அழைத்து, காலையில் என்ன சாப்பிட்டாய் என கேட்டுள்ளார். அப்போது சிறுமி, நேற்று சிப்ஸ் சாப்பிட்டதாக கூறியுள்ளாள். சிப்ஸ் சாப்பிடக்கூடாது என்று உனக்கு தெரியாதா? யார் உனக்கு சிப்ஸ் வாங்கி கொடுத்தது என்று தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.
அதற்கு சிறுமி, தனது தாத்தா தான் சிப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என தனது தாத்தா தன்னை மிரட்டியதாகவும் சிறுமி பயந்தபடியே கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர், ஏன் உன் தாத்தா அவ்வாறு சொன்னார் என்று கேட்டுள்ளார். அப்போது சிறுமி, தனது தாத்தா தனக்கு செய்த பாலியல் வன்கொடுமைகளை குறித்து அழுதபடியே விவரித்துள்ளாள்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்துப் போன தலைமை ஆசிரியர், உடனே இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை பள்ளிக்கு வரவழைத்து, சிறுமியின் பெற்றோர் வந்ததும், சிறுமியின் தாத்தா அவருக்கு திண்பண்டம் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எடுத்துக் கூறியுள்ளார்.
இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தலைமை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி, சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், 69 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Read more: நான் பாலியல் தொழிலாளியா.? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது சீமான்..!! – விஜயலட்சுமி குமுறல்