fbpx

வளர்ப்பு நாய், பூனைகள் மீது ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்த மூதாட்டி..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

சீனாவின் ஷாங்காய் நகரில் வசிப்பவர் மூதாட்டி லியூ. தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில், உயில் எழுதி வைத்திருந்தார். ஆனால், அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசமடைந்த அவர், தனது உயிலை மாற்றி, சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய், பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

இதனையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவமனையை துவக்கி நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்...! மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

Mon Jan 29 , 2024
உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; ஒரே நாடு ஒரே தரவு தளம் ; நிறுவன தரவுகளை ஒப்படைப்பதில் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்டது. புதிய இயங்குதளமானது உயர்கல்வி நிறுவனங்களின் தரவுகளை பல்வேறு நோக்கங்களுக்காக சேகரிக்கும். (அனுமதி, அங்கீகாரம், தரவரிசை) தரவுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, இணை குறுக்கு சோதனைக்கான உள்ளமைக்கப்பட்ட வடிவமைப்பை கொண்டிருக்கிறது. […]

You May Like