முந்தைய மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் பரிந்துரைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் என்.டி.ஏ.வுக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு சில சுயேட்சை எம்பிக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் ஆனால் ஆளும் கூட்டணிக்கு மக்களவையில் அதிக பெரும்பான்மை உள்ளது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சபாநாயகர் பதவிக்கு தங்கள் கூட்டணி வேட்பாளரை நிறுத்துவது குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாட்டை பொறுத்து போட்டியிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுவார். போட்டியின்றி ஓம் பிர்லாவை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த 7 முறை எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more ; மொபைலில் சார்ஜ் சீக்கிரம் காலி ஆகுதா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.. இனி பிரச்சினையே இருக்காது!!