fbpx

மீண்டும் உலகை உலுக்கும் ஓமிக்ரான் BF-7 .. சீனாவில் தொடக்கம்..! 

கடந்த இரண்டு வருடங்களாக உலக அளவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகு, வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது, பின்னர் அது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, ​​சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைவரும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், சீனாவில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் ஓய்வின்றி பணிபுரிந்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பலர் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். சீனாவில் தற்போதைய நிலையில் கொரோனாவில் ஒரு வகையான புதிய பரிமாற்றத்தில் ஓமிக்ரான் BF-7 எனும் வைரஸ் பரவியிருக்கிறது. மருத்துவர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இருப்பினும், சோர்வுற்று ஒரு மருத்துவர் மயக்கமடைந்தது கீழே விழுவதை காட்டுகிறது. இதுதாடர்பாக ஒரு வீடியோவில் தரையில் கிடக்கும் மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து வைரலாகி வருகிறது.

Baskar

Next Post

அவதார் - உக்ரைன் போர் வரை, கவனம் ஈர்த்த தூத்துக்குடி "கிறிஸ்துமஸ் குடில்"..!

Thu Dec 22 , 2022
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் இசிடோர், இவர் கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இல்லத்தில் அந்த ஆண்டு நடைபெறும் பல்வேறு சம்பவங்களின் பிரதிபலிப்பை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கிறிஸ்மஸ் குடில்” அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஓவியர் இசிடோர் தனது மகள் அர்ச்சனாவுடன் இணைந்து கிறிஸ்மஸ் குடில் அமைத்துள்ளார். இந்த கிறிஸ்மஸ் குடிலில் உலகம் முழுவதும் மக்களிடம் இரக்க குணம் […]

You May Like