ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதும் இல்லாததும் அவர் சாப்பிடும் உணவை பொறுத்து தான். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு இன்றியமையாதது. காலை உணவில், நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில், நீங்கள் காலை உணவாக முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு பக்கம் காலை உணவாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், மறுபக்கம் முட்டை சார்ந்த காலை உணவுகளை சமைப்பது மிகவும் எளிது.
குறைந்த கலோரிகள் கொண்ட முட்டையில், அதிக புரதம், வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்த வகையில், காலை உணவாக முட்டையை அவித்து சாப்பிடலாமா அல்லது ஆம்லேட் (Omelette) போட்டு சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். பொதுவாக ஆம்லேட் பலருக்கு பிடிக்கும். இதில் உப்பு, மிளகு போன்ற மசாலா பொருள்கள் சேர்ப்பதால் இதன் சுவை சற்று அதிகம்.மேலும் இதில், நீங்கள் காய்கறிகள், சீஸ், வெண்னை ஆகியவை சேர்த்து சாப்பிடுவதால் சுவை அதிகரிப்பதோடு அதிக ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
இப்படி முட்டையை ஆம்லேட்டாக சாப்பிடுவதால், வயிறு நிறைந்த உணர்வு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும், செரிமானம் சீராகும், தசைகளின் ஆரோக்கியம் மேம்படும், இதயத்திற்கு நல்லது. ஆனால், நீங்கள் ஆம்லேட்டிற்கு அதிக எண்ணெய் சேர்த்து விடக்கூடாது. அதிக எண்ணெய் சேர்த்த காலை உணவு உடலுக்கு நல்லது அல்ல. இதனால் நீங்கள் துளியும் எண்ணெய் சேர்க்காமல் அவித்த முட்டையை சாப்பிடலாம். அதன் வெள்ளைப் பகுதியில் புரதம் அதிகம் இருப்பதால், நீங்கள் வெள்ளைப் பகுதியை மட்டும் கூட சாப்பிடலாம். அதே சமையம் அவித்த முட்டையில் உள்ள மஞ்சள் கருவும் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்பை தான் தருகிறது.
ஆம்லேட் மற்றும் அவித்த முட்டை இரண்டுமே ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், ஊட்டச்சத்துக்களை கொண்டது. ஆனால் இரண்டையும் ஒப்பிடும் போது அதிக கலோரிகள் கொண்ட ஆம்லெட்டை விட, குறைந்த கலோரிகளை கொண்ட அவித்த முட்டை சிறந்தது. ஒரு வேலை உங்களுக்கு அதிக கலோரிகள் தேவைப்பட்டால், நீங்கள் தாராளமாக ஆம்லேட்டை எடுத்துக்கொள்ளலாம்.
Read more: வெந்தையத்தை இப்படி சாப்பிட்டால் தான், கொழுப்பை குறைக்க முடியும்.. டாக்டர் சிவராமன் பகிர்ந்த தகவல்..