fbpx

Omni Bus | ‘அந்த 3 ஸ்டாப்பிங் மட்டும்தான்’..!! ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் மனு தள்ளுபடி..!!

Omni Bus | தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவினை எதிர்த்தும், அதனடிப்படையில், போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிகை செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இதன்படி, சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது:

இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், ரெட்பஸ், அபி பஸ், உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

Read More : https://1newsnation.com/s-ve-shekher-one-month-jail-for-sv-shekhar-judge-sensational-verdict/

Chella

Next Post

அட, WWE சூப்பர் ஸ்டார் 'ஜான் சினா' இந்தப் பிரபல பாலிவுட் நடிகரின் ரசிகரா.!?! சுவாரசிய தகவல்.!

Mon Feb 19 , 2024
wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். சமீபத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் ஹே’ பாடலைப் பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் . wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா, இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் ஹே’ திரைப்படத்தின் பாடலின் ஒரு சில வரிகளை பாடி மீண்டும் தொலைக்காட்சிகளின் தலைப்புச் […]

You May Like