fbpx

தமிழக அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும், வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று.. இந்த சிறப்பு நாளில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை போற்றும் விதமாக, வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன் கீழ் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

95 வயது வரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை பெரியார் நடத்தி உள்ளார்.. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றி இருந்த தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடையை நீக்க கோரி நடந்தது தான் வைக்கம் போராட்டம்.. கேரள தலைவர்களின் அழைப்பின் பேரில், அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.. இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் வைக்கம் போராட்டம் முக்கிய இடம் பெற்றது.. வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் தந்தை பெரியார் சிறையில் இருந்தார்..

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.. இந்த வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது.. எளிய மக்களுக்காக, எல்லைகளை கடந்து போராடி வெற்றிக்கண்ட தந்தை பெரியாரின் நினைவை போற்றவும், சமூகநீதி கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தமிழக அரசு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சிகள் 2023 மார்ச் 30 தொடங்கி ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்..

ஏப்ரல் 1-ம் தேதி கேரளாவில் நடைபெற உள்ள வைக்கம் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறேன்.. பல்வேறு அறிஞர்களிடம் இருந்து வைக்கம் போராட்டம் தொடர்பான கட்டுரைகள் பெறப்பட்டு சிறப்பு மலர் வெளியிடப்படும்.. பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு செப்டம்பர் 17-ல் ‘வைக்கம்’ விருது வழங்கப்படும்.. கேரளா வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை அரசு சார்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. வைக்கம் போராட்டம் குறித்து பழ. அதியமான் எழுதிய நூல் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.. ” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை….! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…..!

Thu Mar 30 , 2023
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு […]

You May Like