fbpx

வீண் அவதூறு.. மன உளைச்சல்..!! வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட யுவன்..!!

#HappyBirthdayU1..! 'இதயத்தின் வலிகளை தொலைக்கச் செய்த இசைக்கு இன்று பிறந்தநாள்..!

வாடகை பாக்கி தரவில்லை என தன் மீது போலீஸில் புகார் அளித்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

முன்னதாக நேற்று காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா, தனது சகோதரி வீட்டில் தங்கி வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சம் வரை வாடகை பாக்கி இருக்கும் நிலையில், திடீரென வீட்டில் இருந்து கடந்த இரு தினங்களாக பொருட்களை எடுத்து செல்வதாகவும், வசூலித்து தரக் கோரியும் ஹஜ்மத் புகார் அளித்திருந்தார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும், இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்யாததைப் போலவே யுவனும் செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் சகட்டு மேனிக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்னை பற்றிய அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் ஃபஸீலத்துல் ஜமீலா அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Read more ; விஜயுடன் கூட்டணி வைக்கும் நாம் தமிழர் கட்சி? – மறைமுகமாக சீமான் சொன்ன விஷயம்!!

English Summary

On behalf of Yuvan Shankar Raja, his lawyer has sent a notice to the owner of his house, Hajmat, seeking damages of Rs 5 crore for defaming him and causing emotional distress.

Next Post

மகிழ்ச்சி செய்தி... வரும் 24,25 & 26 பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை...!

Mon Aug 19 , 2024
Schools are likely to have 3 consecutive days off next week.

You May Like