அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒபாமாவின் கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒபாமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்; தனது பதவிக்காலத்தில் ஆறு முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் மீது ஒபாமா 26,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை போட்டுள்ளார். இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து தலைவர்கள் கருத்து தெரிவிக்கும்போது தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றார். இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அவலநிலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்திய கவலைகளை ஒப்புக்கொண்டார்.