ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல இடங்களில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும் தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.