fbpx

அசத்தல்…! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா…?

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 08.11.2023 ஆம் நாளன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்பு அடங்கும். கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு – சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/- மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’இந்த பட்டாசுகளை மட்டும் தான் வெடிக்க வேண்டும்’..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Nov 2 , 2023
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபாவளி பண்டிகைக்கு மாநிலங்களில் எந்த எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த வருடமும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்த வருடமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் […]

You May Like